| சித்தனாம் பூவுலகில் ரிஷிதானென்பர் சிறப்பான கருவி கரணாதியுள்ளோன் முத்தனாம் மூதுலகம் கடந்தஞானி முனையான பிரம்மலபி கடந்தோனென்பார் சத்தியத்தைத் தவறாத வேள்வியோனாம் தரணிபதி யுலகாளும் ராஜனென்பார் நித்தியமும் பிராணநிலை கலையில் நின்று நிட்களங்கமான சுடரென்பார்தானே |