| தாமான பூசைகொண்ட காளிதானும் தன்மையுடன் சன்னதங்கள் வந்தாற்போல கோமானாம் இடையன்முன் எதிரேநின்று கொற்றவனே குறிசொல்லுங்காலந்தன்னில் சாமான மானதொரு குறிகளல்லோ தாரணியில் இவர்போலுஞ் சித்துமுண்டோ போமேதான் சகலசித்துங் கடந்தஞானி பொங்கமுடன் குறிசொல்லுஞ் சித்தென்பாரே |