| தானான இன்னமொரு ஜாலமார்க்கம் தண்மையுடன் கூறுகிறேன் மைந்தாகேளு தேனான மனோன்மணியாள் கிருபையாலே ஜெகதலத்தில் அனேகவித்தை செப்பக்கேளு கோனான காலாங்கி நாதர்தம்மால் குவலயத்தில் கோடியுக மிருந்துமேதான் பானான வதிசயங்கள் மிகவுஞ்சொல்லி பாலித்தார் எந்தனுக்குக் கோடியாமே |