| இட்டாரே தேர்வேந்தர் ராசர்தாமும் எழிலான கோட்டைக்குள் மத்தியானம் பட்டதொரு ராசர்முன் மாண்பரெல்லாம் பயந்தொடுங்கி கண்கலக்கமிட்டபோது அட்டதிசை தான்கலங்கி சாகரந்தான் வடியோடே யலையதும் மேலேபொங்கி சட்டமுடன் கோட்டைக்குள் சாகரந்தான் சடுதியிலே பொங்கியது முழுகலாச்சே |