| கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு தேறுபுகடிந நவகண்டந்தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில் வீறுபுகடிந இராவணனார் கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் மகத்தான வதிசயங்கள் மெத்தவுண்டே |