| பூசித்துத் தானிருக்கும் காலந்தன்னில் பொங்கமுடன் மாந்தரெல்லாம் உன்னையப்பா ஆசித்து வணங்கியேதான் வன்புகூர்ந்து வப்பனே எந்நாளும் பதாம்புயத்தை நேசித்து யுந்தமக்குக் கருணைகூர்ந்து நெடுங்காலங் கார்த்திருப்பார் மாந்தரெல்லாம் காசுமிகப் பொன்னையெல்லாம் தருவார்பாரு கடாட்சித்து அவர்களுக்கு கதிசொல்வாயே |