| மாளாமல் பறங்கியென்ற பாஷாணத்தை மகிடிநவாக வைக்கிறதோர் முறையைக்கேளு தாளாமல் சூதமொரு பலந்தான்பத்து சாகாமல் கல்லுப்பு பலந்தானெட்டு மீளாமல் வெள்ளையென்ற பாஷாணம் ஐந்து விரவியே கல்வத்தில் பொடித்துக்கொண்டு கேளாமல் திராவகத்தில் எட்டுநாளாட்டி கெடியாகப்பொடிபண்ணி மேருக்கேற்றே |