| சீனமாம் பதினென்பேர் சித்துதாமும் சிறப்பான சாத்திரங்கள் கோடியுண்டு மானமுடன் சித்தாதி சித்தர்தாமும் மயக்கமுடன் வெகுநூல்கள் பாடினார்கள் ஈனமது வாராது எந்தன்நூலு எழிலான குருநூல்தான் சத்தகாண்டம் வானமது மேருவென்ற கைலைமேரு வளப்பமெல்லாம் இந்நூலில் பகர்ந்திட்டேனே |