| பார்க்கையிலே சாத்திரங்கள் இதிகாசங்கள் பண்புடனே பாடிவைத்தார் முனிவர்தானும் ஆர்க்கமுடன் யாரேனும் விள்ளக்கூறி வன்புடனே சாத்திரங்கள் கூறவில்லை மார்க்கமது தெரியாமல் வீணின்காதை மயக்கமுடன் பாடிவைத்தார் நூல்கள்தோறும் சூர்ப்பனகை மாதுவுக்கு தனங்கள்போல சுருதிபஒருள் ஆகமங்கள் கதைபோலாச்சே |