| வரையான கைலாசபதியைக்காண வண்மையுடன் காலாங்கி கடாட்சத்தாலே திரைபோன்ற கடலோரஞ் சுற்றிவந்தேன் தீரமுடன் இருபத்தோர் வரையிற்சென்றேன் நரையான மேருகிரி சிகரந்தன்னில் கைலாசநாதரையான் காணவெண்ணி குறையதுவும் நேராமல் அடியேன்தானும் குளிகைகொண்டு மேல்வரையிற் சென்றேன்தானே |