| கண்டதொரு வதிசயங்களெல்லாங்கண்டேன் காசினியில் காணாத காட்சியெல்லாம் சண்டமாருதம் என்னும்மேருதன்னில் சாங்கமுடன் மகிமையெல்லாம் கண்ணிற் கண்டேன் கொண்டல்வண்ணன் மேகமென்ற இடியுங்கண்டேன் கோடான கோடிவரை முனையுங்கண்டேன் விண்டிடு வதிசயங்கள்யாவும் பார்க்க விருப்பமுடன் மேல்வரையில் வந்திட்டேனே |