| என்றேனே காலாங்கி சீஷனென்றேன் எழிலான சூரியனா ரிஷியாருக்கு குன்றான மலையேறி குளிகைபூண்டு கொற்றவனே மேல்வரையைக் காணவந்தேன் சென்றிடவே யடியேனும் வந்ததாலே செம்முலுடன் எந்தனுக்கு காட்சிதந்து வென்றிடவே மகிமைதனைக் கூறவென்று விழுந்திட்டேன் அவர்பாதம் அழுந்திட்டேனே |