| கொடுத்தவுடன் அடியேனும் முடிவணங்கி கொப்பெனவே பத்துவொன்பதியில்வந்தேன் அடுத்ததொரு நூலிருக்குஞ் சமாதிதன்னை யன்புடனே யான்பார்க்க வேண்டுமென்றேன் கொடுத்ததொரு காவியங்கள் ஆயுர்வேதம் தோறாமல் சமாதியது மலைபோற்கண்டேன் படுத்ததொரு தென்பக்கம் மேருதன்னில் பாங்கான சமஸ்கிருத நூல்கண்டேனே |