| கண்டேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு கொண்டேனே காலாங்கி கிருபையாலே கோடியுகம் தானிருக்க குளிகைபெற்றேன் துண்டரிக மாகவல்லோ குளிகைபூண்டு துப்புரவாடீநு பதினெட்டு ஒன்றிற்சென்றேன் சண்டமாருதம்போல மேருதன்னில் சாங்கமுடன் குளிகையிட்டு யேறினேனே |