| இறங்கினார் என்றல்லோ எந்தனுக்கு எழிலான சித்துமுனி ரிஷியார்தாமும் உம்முடைய வார்த்தையது கூறும்போது ஓகோகோ நாதாக்கள் காண்பியார்கள் திறமுடைய எந்தனது வலுமையாலே தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைகொண்டு சிறகுடைய பட்சியது போலேயானும் சீறுடனே மேல்வரையிற் சென்றேன்பாரே |