| எட்டான மூலிதனை சித்துதாமும் எழிலான அந்திசந்தி காயகற்பம் திட்டமுடன் சதாகாலங் கொள்ளும்போது திரமான மூலியது ஒருநாள்தன்னில் பட்டமரந் தனிலல்லோ தழைகள்மென்று பாங்குடனே தானிருக்கும் வண்மைதன்னை தொட்டவர்கள் யாரென்று சித்துதாமும் தோற்றமுடன் வுள்ளமதில் எண்ணிட்டாரே |