| சென்றேனே புலிப்பாணி மைந்தாகேளு சிறப்பான காலாங்கி கடாட்சந்தன்னில் குன்றேறி குளிகைதனைக் கொண்டுமல்லோ கொற்றவனே மேருகிரி தன்னிற்சென்றேன் அன்றுரித்த மான்தோலும் புலித்தோலுமாக வப்பனே வாயிரம்பேர் ரிஷிகள்கண்டேன் தென்றிசையில் அகஸ்தியனார் முனிவர்போலும் தேற்றமுடன் ஆயிரம்பேர் ரிஷிகண்டேனே |