| பார்த்தேனே யின்னமொரு மகிமைசொல்வேன் பாங்குடனே பதினான்காம் வரையிற்சென்றேன் தீர்த்தமுடன் மேருகிரி தன்னிலப்பா திறமான சிவலிங்கப்பதியைக்கண்டேன் ஆர்த்தியுடன் கோடியேரிஷிகளப்பா அம்மலையில் சூடிநந்திருக்க யானுங்கண்டேன் மூர்த்தியுடன் திருமூர்த்தி சொரூபரோடும் முனையான சிவலிங்கங் கண்டிட்டேனே |