| ஆச்சப்பா வசிட்ட மகாரிஷியின்பக்கல் வப்பனே யானல்லோ சென்றுநின்றேன் மூச்சடங்கி சமாதிதனில் இருந்தசித்து முனையான வசிட்டமகா ரிஷியார்தாமும் பேச்சடங்கி வெகுகால மிருந்தசித்து பிரியமுடன் எந்தனுக்கு உபதேசங்கள் மாச்சலது வாராமல் குளிகைதன்னை மகத்தான சாரணைகள் கூறலாச்சே |