| பாரேதான் சதாசிவனார் ரிஷிகள்தம்மின் பாங்கான காலாங்கி சீஷனென்றேன் சீரோடு எந்தன்மேல் மனதுவந்து சிறப்புடனே எந்தனுக்குக் காயகற்பம் தீரேதான் கிரிதனிலே இருக்கும்தானம் தீர்க்கமுடன் எந்தனுக்கு ஓதினார்கள் ஆரோதான் சொன்னார்போல் அசரீரிவாக்கு வப்பனே மலைமீதிற் கேட்கலாச்சே |