| தாமேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாபாரு நாமேதான் சொன்னபடி வஞ்சனந்தான் நலமான கிரிதனிலே சென்றேன்யானும் போமேதான் சதாசிவனார் ரிஷியைக்கண்டேன் பொங்கமுடன் சகலவரம் யானும்பெற்று வேமேதான் சீனபதியேகுதற்கு விருப்பமுடன் விடையதுவும் பெற்றேன்தானே |