| சித்தான சித்துமுனி யுந்தமக்கு சிறப்பான வுபதேசமென்னவென்றால் முத்தான லோகமதி லதிசயங்கள் மூதுலகில் மெத்தவுண்டு சொல்வேன்கேளிர் புத்தியுள்ள பூமானே துவாபரயுகத்தில் புகழான காலாங்கியுந்தன்நாதர் சத்தியரிச்சந்திரனார் திருச்சங்குக்கு சத்தமுடன் வரமதுவும் மிகத்தந்தாரே |