| தானான சமர்க்களத்தில் இராவணன்தன் தண்மையுள்ள மண்டோதரி தன்னைக்கண்டேன் கோனான ஸ்ரீராமர் தன்னைக்கண்டேன் கொம்பனையாள் பிராட்டியரை யானுங்கண்டேன் மானான தென்னிலங்கை பதியிலப்பா மகத்தான வாக்கருட கூட்டங்கண்டேன் பானான ராட்சதாள் தன்னைக்கண்டேன் பாங்கான ஆஞ்சனேயர் கூட்டந்தானே |