| பாரென்று சீஷவர்க்கம் பகர்ந்தாரப்பா பட்சமுடன் நானுமங்கே சிலதுகாலம் தீரமுடன் ஆசனத்தின் மேலிருந்து தீர்க்கமுடன் தவநிலையி லிருந்தேனப்பா சாரலெனுஞ் சமாதிமுகஞ் சென்றசித்து சட்டமுடன் நெடுங்காலஞ் சென்றசித்து வீரமுடன் சமாதியதுதான்திறந்து விருப்பமுடன் குளிகையைவிட்டு வந்திட்டாரே |