| கண்டேனே கிரிகோடி யமுனைகோடி கண்கொள்ளாதூரமது வினயங்கண்டேன் கொண்டல் வண்ணனச்சுதனார் மலையுங்கண்டேன் குறிப்பான கிருஷ்ணகிரி யென்னலாகும் தண்டுளவ மாலையணி மாலைபூண்ட தாக்கான செந்தாமரைப் பூவைக்கண்டேன் மண்டோதரி தான்வசிக்கும் மலையுங்கண்டேன் மகத்தான மயிலிராவணன் கண்டேனே |