| போற்றினேன் குளிகையது செல்லவென்று பொங்கமுடன் மலைமீதிற் சென்றேன்யானும் ஆற்றலுடன் குளிகைகொண்டு சிகரஞ்சென்று வப்பனே மலைதனிலே இறங்கினேன்யான் மாற்றலுடன் அசுராக்கள் கூட்டத்தோடு மகத்தான தேவரிஷி சூழக்கண்டேன் நீற்றமுடன் மலைதனிலே சுற்றியானும் நிகட்சியுடன் மூலவரைக் கண்டிட்டேனே |