| என்றுமே கழுக்குன்றி சித்துதாமும் எழிலாக எந்தனை யாரென்றுகேட்க வென்றிடவே காலாங்கி நாதர்தம்மின் வேதாந்த சித்தினது சீஷனென்றேன் நன்றிபுரிந் தென்னையவர் சித்துதாமும் நலமுடனே எந்தனுக்கு உபதேசங்கள் குன்றின்மேல் தானிருந்து கோடியாகங் குறிப்புடனே எந்தனுக்குக் கூறினாரே |