| வணங்கவே சமாதியிட பக்கல்தன்னில் வாகுடனே யடியேனும் நிற்கும்போது இணங்கவே நாதாந்த சித்துதாமும் யெழிலாக எந்தனையும் யாரென்றார்கள் சுணங்கமது வாராமல் அடியேன்தானும் சுத்தமுடன் மனதுவந்து சொன்னேன்யானும் மணங்கமழுங் காலாங்கி சீஷனென்றேன் மகத்தான போகரிஷியென்றிட்டேனே |