| சென்றேனே ரேணுகையின் சமாதிபக்கல் செம்மலுடன் குளிகைகொண்டு யானுமல்லோ குன்றான பருவதம்போல் சமாதிகண்டேன் கொப்பெனவே சீனபதிப்பெண்கள்மாரே நின்றேனே சிலகாலம் சமாதிபக்கல் நீட்சியுடன் வடபாகங் கார்த்திருந்தேன் தென்றலுடன் சப்தமது வசரீரிவாக்கு செப்பமுடன் எந்தனுக்குக் கேட்கலாச்சே |