| பாரேதான் குருக்கள்சித்துகேட்கும்போது பாங்கான சிறுபாலன் முனிவன்தானும் நேரேதான் சித்தர்முகந் தன்னைநோக்கி நெடிதான பாலகனும் கூறலுற்றான் தீரேதான் காலாங்கி சீஷனல்லோ தீரமுள்ள நவகண்ட ரிஷியார்பாட்டன் சீரேதான் கிட்டிருந்து விடையும்பெற்று சிறப்புடனே வடகோடி வந்தேன்தானே |