| நின்றதொரு பாலகனை குருக்கள்தானும் நீதியுடன் கேட்கலுற்றார் முனிவர்சித்தர் வென்றிடவே போகர்முகந் தன்னைப்பார்த்து வேதாந்த குருக்கள் சித்துகூறுவண்ணம் சென்றுமே சிறுபாலன் அருகில்வந்து செம்மலுடன் யாரென்ன வென்றுகேட்க இன்றுமுதல் புதிதாகத் தோணுதப்பா எழிலான பாலகனே என்றார்பாரே |