| நினைக்கவே காலாங்கி நாதர்தானும் நீடாழி மடுதனில் சென்றாரென்று புனைமேவுஞ் சீஷனுக்கு வரமுந்தந்து புகழான முதலையது சாபந்தீர்ந்து வினையகற்றி நவகண்ட ரிஷியாருக்கு வீரான பிறவியது தானுந்தந்து சுனைமடுவை விட்டுமல்லோ வருவதற்கு துப்புறவாடீநு வரமதுவும் கொடுத்திட்டாரே |