| தொழுதாரே போகரிஷி வந்தாரென்று தோற்றமுடன் கோடிபேர் மாண்பரெல்லாம் பழுதுபடா திருவேலரிஷியாருக்கு பட்சமுடன் தாமுரைத்தார் மாண்பரெல்லாம் வழுவில்லா காலாங்கிநாதசீடன் வண்மையுடன் வந்ததொரு மகத்துவத்தை மழுவேந்தும் திருவேல ரிஷியார்தாமும் மகதேவர் சந்தோஷங் கொண்டிட்டாரே |