| விடையென்று சொல்லுகையில் போகர்தானும் விருப்பமுடன் சமாதியிடம் மூடியேதான் தடையறவே தசவாண்டு யங்கிருந்தார் சட்டமுடன் சீனபதி தேசந்தன்னில் படைவீரர் காவலுடன் சமாதிபக்கம் பட்சமுடன் தாமிருந்தார் போகர்தானும் சடைபோன்ற சீஷவர்க்க மனேகம்பேர்கள் சாங்கமுடன் கொலுவிருந்தார் சமாதிகாணே |