| போகவென்றார் தேவேந்திர பகவான்தானும் பொங்கமுடன் வடிவேலர் வாகனந்தான் சாகமுடன் சதாகாலம் வடிவேலர்க்கு சட்டமுடன் பொன்மயிலா இருக்கவென்று வேகமுடன் தேவேந்திர பகவான்தானும் எழிலான சாபமது தந்தாரென்றும் பாகமுடன் சாபமதைத் தீர்க்கவென்று பட்சமுடன் பொன்மயிலுங்கேட்கலாச்சே |