| காலாங்கி நாதரென்ற ரிஷியாருக்கு கனமுடைய சீஷவர்க்கம் போகர்தானும் பாலான கிக்கிந்தா மலையினுச்சி பாங்குடனே குளிகைகொண்டு சென்றதுந்தான் மாலான திருவேல ரிஷியார்தம்மை மார்க்கமுடன் பேசியல்லோ கண்டதுந்தான் சீலான கிக்கிந்தா யடிவாரத்தில் சிறப்புடனே ரிஷியாரைக் கண்டார்தானே |