| வந்தாரே சீனபதிதன்னிற்சென்று வளமுடனே முக்காதக்கோட்டைக்குள்ளே அந்தமுடன் போகரிஷிமுனிவர்தானும் அகங்களித்து மனதுவந்து குளிகையிட்டு சொந்தமுடன் காலாங்கி சமாதிபக்கல் சுத்தமுடன் மேற்புறத்தில் வாசல்நின்று சிந்தனையாடீநு அஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது சிறப்புடனே சிரங்குனிந்து வணங்கிட்டாரே |