| தானான தேவரிஷி மயிலேகேளும் தண்மையுடன் வடிவேலர்க்கு கந்தமாக கோனான எனதையர் காலாங்கிக்கு கொற்றவனே யுன்வளப்பம் மிகவனைத்தும் தேனான தேவேந்திரன் வளப்பந்தானும் தேற்றமுடன் யானுரைக்க சாபம்நீங்கி மானான வையகத்தில் ரிஷியுமாக்கி மார்க்கமுடன் வுன்சாபம் தீர்ப்பேன்காணே |