| கேட்டதொரு வடிவேலர் பட்சிக்கல்லோ கிருபையுடன் போகரிஷிநாதர்தானும் வாட்டமுடன் பொன்மயிலாந்தன்னைக்கண்டு வளமான வுத்தாரஞ் சொல்லுற்றார் நீட்டமுடன் திருவேலரிஷியார்தாமும் நீதியுடன் அரிச்சந்திர சித்துமுன்னே தேட்டமுடன் கண்டறிந்து வந்தபின்பு செப்பஉவேன் வடையெனக்கு என்றிட்டாரே |