| சொல்லவே யடியேனை பாறைகொண்டு சோறாமல் மூடவென்று விடையுந்தந்தார் புல்லவே யடியேனும் சமாதிதன்னை புகழாக முடியவல்லோ சமாதிவர்க்கம் அல்லவருங் கண்டதினால் லோகமெல்லாம் அவமான வார்த்தைக்கு உடையுண்டென்று சொல்லியே எந்தனையும் மூடச்சொல்லி துப்புரவாடீநு வாக்கதுவும் தந்திட்டாரே |