| கண்டீரோ சமாதியென்ற சொரூபசித்தை கைலாசசீனபதி போகநாதா விண்டதொரு திருவேலர் திருவாக்குக்கு விருப்பமுடன் போகரிஷி வுரைக்கலுற்றார் சண்டமாருதம்போல சமாதிகண்டேன் சாங்கமுடன் அவ்விடத்தில் சித்துமுண்டு தெண்டமுடன் சமாதியிடம் நின்றுயாமும் தெரிசித்து சமாதியிடம் வந்திட்டேனே |