| தந்தாரே விடையதுவும் பெற்றுக்கொண்டு தகமையுள்ள திருவேல ரிஷியார்முன்னே அந்தமுடன் போகரிஷிமுனிவர்தானும் வன்பாக மலைமீதிற்சென்றுமல்லோ சொந்தமுடன் திருவேல ரிஷியார்பக்கல் தோற்றமுடன் போகரிஷிமுனிவர்தானும் விந்தையது பெற்றமல்லோ ரிஷியார்பக்கல் விருப்பமுடன் சிரங்குனிந்து நின்றிட்டாரே |