| கேட்டதொரு ரிஷியார்க்கு மனதுவந்து கிருபையுடன் காலாங்கி சிஷனென்றார் நாட்டமுடன் போகரிஷிநாதர்தம்மை நாதாந்த சித்தொளிவு ரிஷியார்தாமும் தேட்டமுடன் திரிசங்கு அயோத்திமைந்தன் திகழான வரிச்சந்திரன் சுகமோவென்றார் வாட்டமுடன் போகரிஷிமுனிவர்தானும் வுளமுடனே யான்கண்டதிலையென்றாரே |