| வினவியே திருவேலரிஷியார்தம்மை விருப்பமுடன் யாரென்றுகேட்கும்போது கனமுடனே காலாங்கிநாதர்தம்மை கருத்துடைய நற்சீஷனென்று சொன்னார் தினகரன்போல் முகத்தொளிவைக் கண்ணிற்கொண்டு தீர்க்கமுடன் திருவேலரிஷியார்தாமும் மனதுவந்து வந்தெனக்கு வாசீர்மங்கள் வண்மையுடன் தானுரைப்பார் வேலர்தாமே |