| பணிந்துமே சித்தர்முனி தன்னைநோக்கி பான்மையுடன் அவர்பாதம் தொழுதுமேதான் துணிந்துமே காலாங்கி சீடனென்றார் துப்புரவாடீநு குளிகையது யானுங்கொண்டு பணியான குளிகையது பூண்டுமல்லோ மகத்தான வையகங்கள் சுத்திவந்தேன் கனிவுடனே கிக்கிந்தா மலையைக்கண்டு கருவான மலையென்று இறங்கஇனேனே |