| கண்டாரே திருவேலரிஷியார்தாமும் கடினமுடன் சீஷவர்க்கந்தனையழைத்து அண்டமதில் குளிகைகொண்டு சிறுபாலன்தான் ஆகாய செம்புரவி விட்டிறங்கி சண்டமாருதம்போல மலைதானுள்ளே சட்டமுடன் வந்தவரை யாரென்றென்ன துண்டரீகமுள்ள தொருசீஷவர்க்கம் துப்புரவாடீநு தனையழைத்துக் கேட்டார்தாமே |