| இட்டேனே நான்குதிரு கோட்டைவாசல் எழிலான சித்துமுனி சமாதிகண்டேன் வாட்டமுடன் கோட்டையது வாசல்தாண்டி வண்மையுள்ள திருவேலரிஷியார்முன்னே தட்டாமல் எந்தனையும் சீஷவர்க்கம் சட்டமுடன் எந்தனையுங் கொண்டுசென்றார் திட்டமுடன் திருவேலர் ரிஷியார்தாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டிட்டாரே |