| காணவே கோட்டைவழி தன்னிற்சென்று கருவாக முன்வாசல் நிற்கும்போது தோணவே தாளதுதான் திறந்ததங்கே துப்புறவாடீநு லிங்கமென்ற சமாதிகண்டேன் பூணவே ரெண்டாங்கால் வாசல்சென்று புகழாக எந்தனையுங் கொண்டுசென்றார் நாணவே ஜோதிலிங்கஞ் சமாதிகண்டேன் நாதாந்த சித்தொருவர் கண்டேன்பாரே |