| உண்மையுடன் அசுவினியாந் தேவர்தானும் வுகமையுடன் உத்தாரம்கேட்கும்போது தண்மையுடன் அடியேனும் தாள்வணங்கி சட்டமுடன் யானுரைத்தேன் தேவர்சங்கம் திண்மையுடன் ஆகாயபுரவிதன்மேல் தீர்க்கமுடன் அடியேனும் சென்றுமல்லோ வண்மையுடன் சீனபதியானும் சென்றேன் வளமான புரவிதனைக் கண்டார்தாமே |