| தேவராம் அசுவினியார் கடாட்சத்தாலே தேற்றமுடன் புரவிதனின் மீதிலேறி ஆவலுடன் சீனபதிமார்க்கத்தோர்கள் வன்பாகக் காணுதற்குவேண்டுமென்று மேவலுடன் குளிகைதன்னை சோதித்தேதான் மெச்சியே செம்புரவி கொண்டுவந்தேன் ஏவலது செடீநுவதற்கு சீனத்தோர்க்கு எழிலான புரவியது மகிமைதானே |